செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு - 2017
எமது பாடசாலையின் 2017 ம் ஆண்டுக்கான செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வு 10.02.2017 வெள்ளிக்கிழமை இடம் பெற்றது. பாடசாலை அதிபர் திருமதி.சி.கந்தசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தென்மராட்சி வலயக்கல்விப் பணிப்பாளர் உயர்திரு.சு.கிருஷ்ணகுமார் அவர்களும் மேலும் பல விருந்தினர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்விற்கு மைலோ நிறுவனத்தினர் அனுசரணை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.